News

2020-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களை அமைதி வழங்கும் இயேசு பாலனிடம் எடுத்துச் செல்கிறேன். அவரே உங்களோடு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பவர். எனது அன்பான பிள்ளைகளே, உங்களது ஆழமான விசுவாசம் அழிந்துபோக, மற்றும் சிறப்பான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை தளர்ந்து செல்ல அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வேளையிலும் விசுவாசத்தின் சாட்சிகளாக இருக்க நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். ஆகவேதான் நான் இயேசுவோடு இங்கு வந்துள்ளேன். இதன்மூலம் அவர் தனது அமைதியின் ஆசீரை உங்களுக்கு அருளுகின்றார். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“.

முந்தைய அடுத்தது