2020-09-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! நான் நீண்ட காலமாக உங்களுடன் உள்ளேன், ஏனென்றால் நான் இருக்கும்போது கடவுளின் அன்பு மேலும் அதிகமாக உள்ளது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை அழைக்கிறேன், இறைவனிடமும் செபத்திலும் திரும்பி வாருங்கள். அன்பே உங்கள் வாழ்வின் அளவீடாக இருக்கட்டும்இ மறக்காதீர்கள் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபமும் ஒறுத்தலும் உங்களிலும், உங்களைச் சுற்றியும் அதிசயங்களை நிகழ்த்தட்டும். நீங்கள் செயற்படுத்தும் அனைத்தும்இ கடவுளைப் புகழ்வதாக இருக்கட்டும், அத்துடன் வானகத்திலிருந்து உங்கள் இதயத்திற்கு மகிழ்ச்சி கிடைக்கட்டும், இதன்மூலம் கடவுள் உங்களை அன்பு செய்கிறார் என்பதை உணர்ந்து கொள்வதுடன் அவரே என்னை உங்களிடமும் உலகிற்கும், உங்களை அன்பு செய்யவும், உங்களைப் பாதுகாக்கவும் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்!“