News

2020-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்கள் விண்ணப்பங்களையும் செபங்களையும் கேட்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசு முன்பாகப் பரிந்துரை செய்கிறேன், அவரே வழி, உண்மை மற்றும் வாழ்வாகும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபத்திற்குத் திரும்புங்கள் அத்துடன் உங்கள் இதயங்களை இந்த இரக்கத்தின் காலத்தில் திறப்பதுடன், மனம்திரும்பும் பாதையில் செல்லுங்கள். உங்கள் வாழ்வு மறைந்துவிடும் என்பதுடன் இறைவன் இல்லாமல் எந்த அர்த்தமும் இருக்காது. ஆகவே நான் உங்களை தூய வாழ்வில் வழிநடத்த உங்களுடன் உள்ளேன், இதன்மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் மகிழ்வைக் கண்டடைவீர்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்கின்றேன், உங்களை அன்னையின் ஆசீர் வழங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகின்றேன்.„

முந்தைய அடுத்தது