2020-05-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! உங்கள் அனைவரதும் புது வாழ்விற்காக என்னுடன் சேர்ந்து செபியுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்களுக்குத் தெரியுமா, உங்களது இதயத்தில், நீங்கள் என்ன மாற்றத்தை அடையவேண்டுமென: இறைவன் பக்கம் திரும்புங்கள், இதன்மூலம் தூயஆவி உங்கள் வாழ்வு மற்றும் உலகப் பார்வையில் புதுமாற்றத்தை ஏற்படுத்துவார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இந்த அமைதியற்ற காலத்தில் செபிக்காத அனைவருக்காகவும் செபியுங்கள், துன்பத்திலிருக்கும் அனைவருக்கும் மகிழ்வைக் கொடுங்கள், இருளில் இருப்பவர்களுக்கு ஒளியைக் கொடுங்கள். செபிப்பதுடன், புனிதர்களின் உதவியுடன் பாதுகாப்பை நாடுங்கள், இதன்மூலம் நீங்கள் வானகத்தையும் தூயகத்தின் உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களைப் பாதுகாத்து, உங்கள் அனைவருக்கும் அன்னையாம் எனது ஆசீரை வழங்குகிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகிறேன்.„