News

2020-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்கள் வாழ்விலும் இதயத்திலும் எப்போதும் உள்ளேன் என்பது எனக்குத் தெரியும். நான் உங்கள் அன்பை உணர்கிறேன், உங்கள் செபத்தைக் கேட்கிறேன் மற்றும் அவற்றை எனது மகனிடம் வழங்கி வருகின்றேன். ஆனால், எனது பிள்ளைகளே, நான் தாயக்குரிய அன்புடன் எனது அனைத்துப் பிள்ளைகளின் வாழ்விலும் இருக்க விரும்புகின்றேன். எனது அனைத்துப் பிள்ளைகளும் எனது தாய்குரிய போர்வைக்குக் கீழாக என்னைச்சுற்றி ஒன்றுசேர்வதை விரும்புகின்றேன். ஆகவே, நான் உங்களை அழைக்கிறேன், அத்துடன் எனது அன்பின் தூதர்கள் எனப் பெயரிட்டுள்ளேன், இதன்மூலம் நீங்கள் எனக்கு உதவுகிறீர்கள். எனது பிள்ளைகளே, எனது மகன் „எங்கள் தந்தையே“ என்ற வார்த்தையைக் கூறியுள்ளர் - எங்கள் தந்தையே, நீர் எங்கும் இருக்கிறீர் என்பதுடன் எமது இதயத்திலும் உள்ளீர்- ஏனென்றால் அவர் உங்களுக்கு செபிக்கும் வார்த்தைகளையும் உணர்வுகளையும் கற்பிக்க விரும்புகிறார். நீங்கள் எப்பொழுதும் சிறப்புறவும் இரக்கம் மிகுந்த வாழ்வை வாழவும் உங்கள் அயலாருக்கு ஆறுதல் வார்த்தைகளையும், அவர்கள் பிரச்சினைகளை உணர்ந்து நீதியின்மேல் தாகம் கொண்டவர்களாகவும் வாழவும் அவர் விரும்புகிறார். ஆனால், எனது அன்பான தூதர்களே நீங்கள் மற்றவர்களுக்கு எதை வழங்குகின்றீர்களோ, எனது மகன் அவற்றை பரிசாக ஏற்றுக்கொள்கின்றார். அத்துடன் நான் உங்களுடன் உள்ளேன், ஏனென்றால் எனது அன்பு ஒளிக்கீற்றுக்களாக உங்கள் ஆன்மாக்கு மீள உயிர்கொடுக்கவும், நீங்கள் சமாதானத்தையும் நித்திய வாழ்வையும் தேட உதவுமாறு எனது மகன் விரும்புகிறார். ஆகவே எனது அன்பான பிள்ளைகளே, ஒருவர் ஒருவரை அன்பு செய்யுங்கள். எனது மகனுடன் ஒன்று சேருங்கள், கடவுளின் பிள்ளைகளாகுங்கள், அனைவரும் ஒன்றுசேர்ந்து நிறைந்த திறந்த சுத்தமான இதயத்துடன் „எங்கள் தந்தையே“ என்று கூவி அழைப்போம். நீங்கள் பயம் கொள்ளாதீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.“

முந்தைய அடுத்தது