இறை இரக்க ஆண்டில் திருமலை ஆயரின் தலைமையில் சிறப்புடன் நடைபெற்ற கேவலார் அன்னையின் பெருவிழா 13-08-2016
புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து யேர்மனி தேசத்தில் கேவலார் திருப்பதியில், இலங்கை மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காக வேண்டுதல் செய்யும் பெருவிழா இவ்வாண்டும் 13.08.2016 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரகடனப்படுத்தப்பட்ட இரக்கத்தின் ஜூபிலி ஆண்டில் „உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்“(லூக்கா 6:36) என்ற தொனிப்பொருளில் இம்முறை இத்திருவிழா நடைபெற்றது.