"ஒவ்வொரு திருவிழாக்களும் நம்மை ஆன்மீகவாழ்வின் அடுத்த நிலைக்கு இட்டுசெல்லட்டும்" சிறப்புடன் நடைபெற்ற கேவலார் முத்துவிழாவில் யாழ் ஆயர்
ஆயர் தமது மறையுரையில் அன்னை மரியாள் தன்னை இழந்து இறைவனின் சித்தத்தை தனது வாழ்வின் நிறைவேற்றினாள். நாமும் எம்மை இழக்க வேண்டும். "நான், எனது" என்ற எண்ணக்கருத்து எம்மிலிருந்து ஒழிய வேண்டும். பேதுரு தான் என்ற எண்ணத்தில் இருந்த போது, தனது ஆன்மீக வாழ்வின் வீழ்ந்து போனார். ஆனால் அவர் எப்போது தன்னை இழந்து இறைசித்தத்திற்கு தன்னை கையளித்தாரோ, அப்போது அவர் ஆண்டவரால் உயர்த்தப்பட்டார். இறைவனின் சித்தத்தை தனது வாழ்வில் நிறைவேற்றினார். அதே போல நாமும் நம்மை இழக்க வேண்டும். ஒவ்வொரு திருவிழாக்களும் நம்மை ஆன்மீக வாழ்வின் அடுத்த நிலைக்கு இட்டு செல்லவேண்டும். இந்த கேவலார் திருவிழாவும் எம்மை ஆன்மீக வாழ்வில் அடுத்த நிலைக்கு இட்டு செல்லவேண்டும். எம்மை இழந்து ஆண்டவரின் சித்தத்திற்கு எம்மை கையளிப்போம். "உமது சித்தம் நிறைவேறட்டும்" என்று ஆண்டவரின் சித்தத்திற்கு எம்மை கையளிப்போம்