News Image

யாழ் தியான இல்ல இயக்குனர் அருட்.திரு.லோறன்ஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் தவக்கால இறைத்தியான வழிபாடுகளும் குணமாக்கல் வழிபாடுகளும்.

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக
தவக்காலம் முழுவதும் இறைத்தியான மற்றும் குணமாக்கல் வழிபாடுகளை ஒழுங்கு செய்துள்ளது. இவ்வருடம் யாழ்நகரில் அமைந்துள்ள தியான
இல்லத்தின் இயக்குனர் அருட்.பணி.லோறன்ஸ் அடிகளாரால் தவக்காலம் முழுவதும் இவ்வழிபாடுகள் நடை பெறவுள்ளன.
13.02.2013 முதல் 01.04.2013 வரை நடைபெறவுள்ள இவ் சிறப்பு இறைத்தியான வழிபாடுகளில், மனமாற்றத்திற்காகவும்
உடல் நோய்களுக்காகவும் சிறப்பு செபவழிபாடும் நடைபெறும்.

முந்தைய அடுத்தது