News Image

நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்த தவக்காலத்தின் முதலாம் வாரத்திற்கான இறைத்தியான மற்றும் குணமாக்கல் வழிபாடு.

அருட்தந்தை.லோரன்ஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில், யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற இறைத்தியான வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. தவக்காலத்தின் முதலாவது வாரத்தின் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இவ் சிறப்பு இறைத்தியான மற்றும் குணமாக்கல் வழிபாடுகள் நடைபெற்றன. இறைவார்த்தையிலும் நற்கருணை விசுவாசத்திலும் இறைமக்களை ஆழப்படுத்தும் வகையில் இவ்வழிபாடுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இச்சிறப்பு வழிபாடுகளில் உடல் உள ஆன்ம நோய்களுக்காக சிறப்பு செபவழிபாடும் நடைபெற்றது. 16.02.2013 சனிக்கிழமை எசன் நகரிலும் 17.02.2013 அன்று டோட்முண்ட் நகரிலும் நடைபெற்றன. யேர்மனியில் நிகழும் சீரற்ற காலநிலைமையின் மத்தியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இவ் வழிபாடுகளில் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய அடுத்தது