மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
எமது இணையத்தில் மாதாந்த விவிலிய வினா விடைப்போட்டி ஆரம்பிக்கபட்டுள்ளது. தாயகத்தில் வாழும் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் பிள்ளைகளும், இலகுவாக பங்குபற்றுவதற்காக, தமிழ் ஆங்கிலம் யேர்மன் ஆகிய மொழிகளில், இவ் மாதந்த அறிவுத்தேடல் போட்டி தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை நடைபெறும் இப் போட்டிகளில் பங்குபற்றி பெறும் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கப்படும். புதிய ஏற்பாட்டின் மத்தேயு நற்செய்தியின் முதல் இரண்டு அதிகாரங்களில் இருந்து முதலாவது வினாக்கொத்து தயாரிக்கபட்டுள்ளது. வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்குபற்றலாம். 2014ஆம் ஆண்டின் தை மாதத்திற்கான வினாக்கொத்து தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 31/01/2014 வரை இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 2014 மாசி மாதத்திற்கான வினாக்கொத்து 01/02/2014 அன்று தரவேற்றம் செய்யப்படும்.