News Image

யேர்மனியில் அருட்தந்தை.போல் றொபின்சனின் நெறிப்படுத்தலில் நற்செய்தி பகிர்வும் குணமாக்கல் வழிபாடும்.

வூப்பெற்றால்,நியுரன்பேர்க் மற்றும் பிராங்க்போர்ட் பணித்தளங்களின்
ஏற்பாட்டில் எதிர்வரும் 07/02/2014, 08/02/2014, 09/02/2014 ஆகிய தினங்களில்
அருட்தந்தை போல் றொபின்சனின் நெறிப்படுத்தலில் குணமாக்கல்
வழிபாடுகள் நடை பெறவுள்ளது. அருட்தந்தை.போல் றொபின்சன் அவர்கள்
தமது கலாநிதி பட்ட படிப்பை பூர்த்தி செய்து, தாயகம் திரும்ப உள்ள
இவ்வேளையில் இவ் வழிபாடுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011,2012ஆம் ஆண்டுகளிலும் அருட் தந்தையின் நெறிப்படுத்தலில்
யேர்மனியின் பல இடங்களில் குணமாக்கல் வழிபாடுகள் நடைபெற்றமை
குறிப்பிடத்தக்கது.



முந்தைய அடுத்தது