புதிய திருமலை ஆயரை வாழ்த்தி வரவேற்கின்றோம்
அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்கள், திருகோணமலை மறைமாவட்ட ஆயராக 25-07-2015 சனிக்கிழமை அன்று முன்னாள் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார். இவருக்கான ஆயர்ப் பட்டமளிப்பு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.திருகோணமலை மறை மாவட்டத்தின் ஆறாவது ஆயராகவும் திருமலை மண்ணின் பிறந்த முதல் ஆயராகவும் கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை திருப்பொழிவு செய்யப்பட்டுள்ளார். எல்லோருக்கும் எல்லாமாகிட என்ற விருதுவாக்குடன் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டுருக்கும் மேதகு கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களுக்கு புலம்பெயர் மக்கள் சார்பாகவும் குறிப்பாக திருமலை மறைமாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் தெரிவிக்கின்றது.