News

யாழ் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களினால் , யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை.ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் அவர்கள் 13-10-2015 செவ்வாய்க்கிழமை இலங்கை நேரம் 15.30 மணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜஸ்டின் பெர்னார்டு ஞானப்பிரகாசம் அவர்கள், யாழ் கரம்போனில் 1948ம் ஆண்டு மே 13ம் தேதி பிறந்தவர். இவர் கண்டியிலும், பூனாவிலும் மெய்யியல், இறையியல் கல்வியை முடித்து 1974ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

முந்தைய அடுத்தது