சிறப்புடன் நடைபெற்ற யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இயக்குனர் அருட்.பணி.அ.பெ.பெனற் அடிகளாரின் குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா.
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இயக்குனர் அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அடிகளாரின் குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா 19.06.2014 அன்று வியாழக்கிழமை எசன் மாநகரில் மாலை 15.00மணிக்கு நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட குருக்களும் பல நூற்றுக்கணக்கான மக்களும் வெள்ளிவிழா திருப்பலியில் கலந்து கொண்டனர். அன்றைய திருப்பலியில் அருட்பணி.ஞானரெட்ணம் அவர்கள் மறையுரை ஆற்றினார்.