News

மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி - 2014 மாசி

இவ்வருடம் எமது இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட மாதந்த விவிலிய வினா விடைப்போட்டியின், இம்மாதத்திற்குரிய வினாக்கொத்து தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இலகுவாக இணையத்திலேயே விடைகளைத்தெரிவு செய்து சமர்ப்பிக்க கூடிய முறையில் இத்தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது முதலாவது வினா விடைப்போட்டியில் 15 க்கும் அதிகமான நாடுகளைச்சேர்ந்த 160க்கும் மேற்பட்டோர் பங்கு பற்றி இருந்தனர்.


வழமை போலவே இம்முறையும், தாயகத்தில் வாழும் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் பிள்ளைகளும், இலகுவாக பங்குபற்றுவதற்காக, தமிழ் ஆங்கிலம் யேர்மன் ஆகிய மொழிகளில், இவ் மாதந்த அறிவுத்தேடல் போட்டி தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டின் மத்தேயு நற்செய்தியின் மூன்றாம் நான்காம் அதிகாரங்களில் இருந்து இரண்டாவது வினாக்கொத்து தயாரிக்கபட்டுள்ளது. வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்குபற்றலாம். 28/02/2014 வரை இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 2014 பங்குனி மாதத்திற்கான வினாக்கொத்து 01/03/2014 அன்று தரவேற்றம் செய்யப்படும்.


ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை நடைபெறும் இப் போட்டிகளில் பங்குபற்றி பெறும் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கப்படும்.


நீங்களும் பங்குபற்றுங்கள் பிறருக்கும் அறிவியுங்கள்

முந்தைய அடுத்தது