நம்பிக்கை ஆண்டில் சிறப்புடன் நடைபெற்ற கேவலார் அன்னையின் பெருவிழா
'ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்' (லூக்கா 1:45) என்று அன்னை மரியாளை எலிசபேதம்மாள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து போற்றினார். நம்பிக்கை ஆண்டில் வாழும் எமக்கு, அன்னை மரியாளின் வாழ்வின் வாழ்க்கை நமக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. இவ்வுலகினைப் படைத்த இறைவன் மனுக்குலத்தைப் பாவத்தில் இருந்து மீட்க மனிதனாக பிறக்கத் திருவுளமானபோது இறைவனின் அன்னையாக இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட புனித கன்னி மரியாள், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்துக்கு எடுத்து கொள்ளப்பட்ட திருவிழாவினை நினைவு கூரும் முகமாக புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஆண்டுதோறும் கேவலார் திருப்பதியில் ஒன்றுகூடி கொண்டாடும் விழாவானது, இம்முறையும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.