பணியகத்தின் மூத்த நீண்ட நாள் பணியாளர் அன்ரனி அமிர்தநாதர் அவர்கள் இறைபதம் அடைந்தார்.
அன்புக்குரியவர்களே, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யேர்மன் - ஒஸ்னாபுறூக் இடத்தை வாழிடமாகவும் கொண்ட, எமது யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஒஸ்னாபுறூக் (Osnabrück) பங்கைச் சேர்ந்த, முன்னாள் தொடர்பாளரும், அருட்தந்தை இன்பநாதன் அடிகளார் அவர்களின் அன்புத் தந்தையும், இப்போதைய உதவித் தொடர்பாளருமாகிய அமலா டில்சாந் அவர்களின் அன்புத் தந்தையுமாகிய அன்ரனி அமிர்தநாதர் அவர்கள், இன்று காலை 3 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை மிகவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.