யாழ் ஆயரின் தலைமையில் கேவலார் அன்னையின் பெருவிழா 10-08-2019
புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா! யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் அழைப்பை ஏற்று, இவ்வாண்டு யாழ் மறைமாவட்ட ஆயர் யாழ் ஆயர் அதிவண . ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் ஆண்டகை அவர்கள் கேவலார் அன்னையின் திருவிழாவிற்கு வருகை தரவுள்ளார். மேலும் கேவலார் அன்னையின் திருவிழாத்திருப்பலி யாழ் ஆயரின் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.