வூப்பெற்றால் பணித்தள சந்திப்பு
வூப்பெற்றால் தூய ஆவியானவர் பணித்தள மக்களை கேளின் மறைமாவட்ட பிறமொழிகளுக்கான குருமுதல்வர்(Bischofsvicar)Monsignore Dr.Markus Hoffmann மற்றும் பிற மொழிகளுக்கான பேச்சாளர் Herr.Markus-J.Heeg சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இந்நிகழ்வானது 04-03-2018 ஞாயிறு அன்று எமது கலாச்சார முறைப்படி பிரதம விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அதனைத்தொடர்ந்து எமது பணியக இயக்குனருடன் இணைந்த கூட்டுத்திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் நிறைவில் பிரதம விருந்தினர்கள் பணித்தள மக்களை ஆலய மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.இந்த கலந்துரையாடலின்போது பணித்தள மக்களின் பல வகையான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.