எமது இணையத்தள குழுவில் பணிபுரியும் அருட்பணி.டொனால்ட் அவர்களின் தாயார் திருமதி.ஆரோக்கிய மேரி இறைபதம் அடைந்தார்.
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் இணையத்தள குழுவில் இணைந்து பணியாற்றும் கும்பகோணம் மறைமாவட்ட(தமிழகம்)த்தை சேர்ந்த அருட்பணி.டொனால்ட் அடிகளாரின் தாயார் திருமதி.ஆரோக்கிய மேரி அவர்கள் 01-03-2018 அன்று தனது 83 வது வயதில் இறைபதம் சேர்ந்தார். அன்னார் எமது இணையத்தள குழுவில் பணியாற்றும் சகோதரன் அந்தோனி சாமியின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் தனது அனுதாபங்களை செபங்களுடன் தெரிவித்து கொள்கின்றது. திருமதி.ஆரோக்கிய மேரி அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் நித்திய பேரின்ப வீட்டில் இளைப்பாறுவாராக.