News

திருஅவையின் 56ஆவது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்

சனவரி 18 ஆம் தேதி புதன் முதல் 25ஆம் தேதி புதன்கிழமை வரை எட்டு நாட்கள் 56 ஆவது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், தலத்திருஅவைகளிலும் உரோம் நகரிலும் கொண்டாடப்பட உள்ளது


திருஅவையில் ஆண்டு தோறும் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரமானது 2023 ஆம் ஆண்டு சனவரி 18 முதல் 25 ஆம் தேதி புதன்கிழமை வரை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் 56ஆவது நிறைவுவிழா மாலை செபவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.


சனவரி 18 ஆம் தேதி புதன் முதல் 25ஆம் தேதி புதன்கிழமை வரை எட்டு நாட்கள் சிறப்பிக்கப்படும் 56 ஆவது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், பல்வேறு தலத் திருஅவைகளிலும், தலைமைப்பீடம் இருக்கும் உரோம் நகரிலும் நடைபெற உள்ளது.


இறுதி நாளான ஜனவரி 25ம் தேதி உள்ளூர் நேரம் மாலை, 5.30மணிக்கு உரோம் நகர் புனித பவுல் பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் இச்செபவார நிறைவு வழிபாடு இடம்பெற உள்ளது.


மேலும், சனவரி மாதம் 22 ஆம் தேதி இறைவார்த்தை ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி, 25 ஆம் தேதி புதன்கிழமை புனித பவுல் பெருங்கோவிலில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு வழிபாட்டு செபம் போன்றவற்றை சிறப்பிக்க இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி மாதம் 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை தென் சூடான் மற்றும் காங்கோ குடியரசு நாடுகளுக்கு திருத்தூதுப்பயணமும் மேற்கொள்ள இருக்கின்றார்.

முந்தைய அடுத்தது