இயேசுவை எப்போதும் உற்றுநோக்கி வழிகளை அமைத்துக் கொள்வோம்
ருப்பயணியாக இவ்வுலகில் இருக்கும் மனிதகுலத்திற்கான பணியில், கலந்துரையாடல்களுக்கும் இணைப்புப் பாலங்களுக்கும் உரமூட்டி, அனைவரின் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும், புனித பேதுரு மற்றும் பவுல் அமைப்பின் அங்கத்தினர்களுக்குத் தன் நன்றியை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்,
புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் அமைப்பு துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டை முன்னிட்டு, அவ்வமைப்பின் அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில் எத்தனையோ மோதல்களை நாம் எதிர்கொண்டாலும், வாழ்வின் கலை என்பது, அதில் ஏற்படும் சந்திப்புகள்தான் என எடுத்துரைத்தார்.
உரோம் நகரின் புனித பேதுரு பெருங்கோவிலில் நுழையும் பயணிகளுக்கு இயேசுவின் இரக்கம் நிறை இன்முகத்துடன், இவ்வமைப்பின் அங்கத்தினர்கள் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டிய திருத்தந்தை, தாங்கள் சந்திக்கும் திருப்பயணிகளுக்கு ஆற்றப்படும் பணிகள்வழி, வாழ்வு சான்றுகளாக விளங்குங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், மேலும் மனிதாபிமானத்துடன் செயல்படுவதுக் குறித்தும், இயேசுவை எப்போதும் உற்றுநோக்கி வழிகளை அமைத்துக் கொள்வோம், என்பது குறித்தும், இதயங்களில் நம்பிக்கை, மற்றும் எதிர்நோக்குடன் எப்போதும் செயல்படவேண்டியது குறித்தும் தன் கருத்துக்களை, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் அமைப்பின் அங்கத்தினர்களுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.