News

நம்பிக்கைக்கொள்வோருக்கு இரக்கத்தை வழங்கும் இறைவன்

தங்களை உயர்ந்தவர்களாக எண்ணாமல், தாழ்ச்சி பண்புடன் வாழும் மக்கள் வழியாக இறைவன் அரும்பெரும் செயல்களை ஆற்றுகிறார் என, ஜனவரி 8, சனிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாழ்ச்சி பண்புடன் வாழ்வதுடன், தங்கள் வாழ்வில் இறைவனுக்கு அதிக இடத்தைக் கொடுப்பவர் வழியாக அரும்பெரும் செயல்களை ஆற்றும் இறைவன், அவரில் நம்பிக்கைக் கொள்வோருக்கு இரக்கத்தை வழங்குவதுடன், தங்களைத் தாழ்த்துவோரை உயர்த்துகிறார் என ஜனவரி 8ம் தேதி சனிக்கிழமையன்று வெளியிட்ட திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

மேலும், இதே நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Marc Quallet, திருபீடத்திற்கான எகிப்தின் தூதர் Mahmoud Talaat, போலந்தின் செனட் அவைத்தலைவர் Tomasz Grodzki, உரோம் மேயர் Roberto Gualtieri, Lazio மாகாணத் தலைவர் Nicola Zingaretti, மற்றும் புனித பேதுரு பவுல் அமைப்பின் அங்கத்தினர்களையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

முந்தைய அடுத்தது