2019-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! செபியுங்கள்! செபியுங்கள்! ஒவ்வொரு நாளும் செபமாலையைத் தியானியுங்கள்.
இந்த பூ வளையமானது, அன்னையாகிய எனக்கு உங்கள் வேதனைகள், துயரங்கள், விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை நேரடியாக இணைத்து வைக்கின்றது. எனது அன்பான தூதர்களே, எனது மகனின் இரக்கம் மற்றும் அன்;பு காரணமாக நான் உங்களுடன் இருப்பதுடன் செபிக்குமாறு உங்களை உற்சாகப்படுத்துகின்றேன். உலகத்திற்கு உங்கள் செபங்கள் மிகவும் தேவைப்படுகின்றது, இதனால் ஆன்மாக்கள் மனம்திரும்பட்டும். எனது மகன் முழு நம்பிக்கையுடன் உங்கள் இதயங்களைத் திறப்பதுடன் அவரது வார்த்தைகளை ஒன்றுபடுத்தி வழங்குகிறார்-இதுவே அன்பாகும். எனது பிள்ளைகளே, அன்னையாக நான் உங்களுக்குக் கூறுகிறேன், எனது மகனின் முன்பாக முழந்தாள்படியிடுவதற்கு இதுவே சரியான தருணம், அத்துடன் அவரை உங்கள் இறைவனாக -உங்கள் வாழ்வின் நடுப்புள்ளியாக- தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு விருப்பமான காணிக்கைகளை வழங்குங்கள், அதாவது அயலாரை அன்புசெய்வது, இரக்கம்காட்டுவது மற்றும் தூய இதயத்தைக் கொண்டிருப்பது. எனது அன்பார்ந்த தூதர்களே, எனது பல பிள்ளைகள் எனது மகனை தமது இறைவனாக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்கள் அவரது அன்பை இதுவரை கண்டறிந்து கொள்ளவில்லை. நீங்கள் உங்கள் செபங்கள் மூலமாக, தூய மற்றும் திறந்த இதயத்துடன் கேட்டு, உங்கள் காணிக்கைகளை எனது மகனிடம் கொடுப்பதன் ஊடாக கடுமையாக இருக்கும் இதயங்களைத் திறக்கச் செய்யுங்கள். எனது அன்பார்ந்த தூதர்களே, பலமுள்ள இதயத்தால் வேண்டப்படும் செபங்கள் உலகத்தை மாற்றியமைக்கும். ஆகவே எனது பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள். நான் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களுக்கு நன்றிகூறுகின்றேன்.„