2023-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! சமாதானத்தையும், உயிர்த்த இயேசுவின் மகிழ்வையும் செபத்துக்குத் தூரமாக வாழ்பவர்களுக்கு வழங்குபவர்களாக வாழ நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன், இதன்மூலம் இயேசுவின் அன்பு அவர்களின் வாழ்வை மாற்றி அவர்களை ஒரு புதுவாழ்வுக்கும் புனிதத்திற்கும் இட்டுச்செல்லட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்!“