News

2019-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நீங்கள் எனது மகனை அன்பு செய்வதை நான் பார்க்கும்போது, எனது இதயம் மிகுந்த மகிழ்ச்சியால் நிரம்புகிறது. நான் உங்களுக்கு அன்னையாம் எனது ஆசீரை வழங்குகிறேன். இவ்வாறான அன்னையின் ஆசீரை, நான் உங்கள் மேய்ப்பர்களுக்கும் வழங்குகிறேன் - உங்களில் எவர் எனது மகனின் வார்த்தைகளை எடுத்துரைக்கின்றார்களோ, யார் தமது கைகளால் ஆசீர்வதிக்கின்றார்களோ மற்றும் யார் அவரை அதிகம் அன்பு செய்கிறார்களோ, அதாவது யார் அவருக்காக ஒவ்வொரு தியாகங்களையும் செய்ய மகிழ்ச்சியுடன் ஆயத்தமாக உள்ளார்களோ அவர்களுக்கு அவரின் ஆசீர் கிடைப்பதாக. நீங்கள் அவரைப் பின்தொடர்கின்றீர்கள், அவரே முதல் ஆயன், முதல் நற்செய்தி அறிவிப்பாளர். எனது பிள்ளைகளே, அன்பின் தூதர்களே, மற்றவர்களுக்காக வாழ்வது மற்றும் பணியாற்றுவது, அத்துடன் யாரை நீங்கள் எனது மகன் மூலமாக அன்பு செய்கின்றீர்களோ, அதுவே உலக வாழ்வில் மகிழ்வையும் ஆறுதலையும் தரும். எனது மகனை அன்பு செய்வோர் மற்றும் அவரின் மூலமாக ஒருவரை ஒருவர் அன்பு செய்வோருக்கு மத்தியில் வார்த்தைகள் அவசியமில்லை. பேசப்படாத வார்த்தைகள் மற்றும் கூறப்படாத உணர்வுகளைக் கேட்பதற்கு, பார்வை ஒன்றே போதுமானது. எங்கே அன்பு ஆளுகின்றதோ அங்கு காலங்கள் கணக்கிடப்படுவதில்லை. நாங்கள் உங்களுடன் உள்ளோம். எனது மகன் உங்களை அறிந்திருப்பதுடன் உங்களை அன்பு செய்கிறார். ஆகவே எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் எங்கு சென்றாலும் அன்பையும் நம்பிக்கையையும் வழங்கி அன்பின் தூதர்களாகப் பிரகாசியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“

முந்தைய அடுத்தது