Banner Image

பரிசுத்த ஆவியின் செபம்

பழைய மொழிபெயர்ப்பு

திவ்ய இஸ்பிரித்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளிவாரும். பரலோகத்தில் நின்று உம்முடைய திவ்ய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரர்களுடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கின்றவரே இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தில் சுகமே, வெயிலில் குளிற்சியே, அழுகையில் தேற்றரவே எழுந்தருளிவாரும். வெகு ஆனந்தத்தோடு கூடியிருக்கிற பிரகாசமே உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பணங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதை சுத்தம்பண்னும். உலர்ந்ததை நனையும். நோவாய் இருக்கிறதை குணமாக்கும். வணங்காததை வணங்கப்பண்னும், குளிரோடிருக்கிறதை குளிர் போக்கும். தவறினதை செவ்வனெ நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புன்னியத்தின் பேறு பலன்களையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்ச சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
- ஆமென்

புதிய மொழிபெயர்ப்பு:

தூய ஆவியே எழுந்தருள்வீர்,
வானிலிருந்து உமது பேரொளியின் அருட்சுடரை எம்மீுது அனுப்பிடுவீர்.

எளியவர்களை ஆறிவதற்கான அருள் வேண்டும் –
நற்பரிசின் வல்லவர், இதய ஒளியே உன்மேல் எழுந்தருள்வீர்.

உன்னத ஆறுதலாளே,
ஆன்மாவின் இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வேதனையை நிவர்த்திக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதல்தருவேன்.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை நம்பும் போருள்ள நெஞ்சின் ஆழத்தை நிரப்பிடுவீர்.

உமது அருள் இல்லாமல் மனிதர் ஒன்றும்விடவும் நிலைக்காது.
அவனில் நல்லதோ, பலனோ ஒன்றும் இல்லை.

மாசைக் கழுவிடுவீர்,
உலர்ந்ததை நனைத்திடுவீர்,
காயம் ஏற்பட்டதை குணப்படுத்திடுவீர்.

வணங்காததை திருப்பிச் செய்யவீர்,
உறைந்ததை உறவழித்திடுவீர்,
தவறை திருத்திடுவீர்.

இறைவா! உம்மை நம்பும் அடியார்க்கு
கொடைகள் ஏழையும் பரிசளித்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கி,
இறுதியில் மீட்பையும் சேகரிப்பீர்,
அழிவில்லா வாழ்வு அருள்வீர். ஆமென்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media