News

இறைவார்த்தையை திறந்த மனதுடன் வரவேற்போம்

தூய ஆவியாரால் ஊடுருவப்பட்ட இறைவார்த்தை நம் இதயங்களில் பெரும் மாற்றங்களைச் செய்யவல்லது என தன் செவ்வாய் தின டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.


தூய ஆவியாரால் ஊடுரவப்பட்டு ஒன்றிக் கலந்த இறைவார்த்தையை நாம் திறந்த மனதுடன் வரவேற்கும்போது, அது இதயத்தை அப்படியே விட்டுவிட்டுச் செல்வதில்லை, மாறாக, புதியதொரு மாற்றத்தை உருவாக்கிச் செல்கிறது என ஜூன் 11ஆம் தேதியின் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை 5477 ஆங்கில மொழி டுவிட்டர் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த டுவிட்டர் பக்கத்தில் பல மொழிகளில் தனித்தனியாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதன் ஆங்கிலப் பக்கத்தை மட்டுமே இதுவரை 1 கோடியே 85 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

முந்தைய அடுத்தது