News

யேசுவின் அன்பே நம் வாழ்வை மாற்றுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவிடமிருந்து நாம் பெறும் அன்பே நம் வாழ்க்கையை மாற்றியமைத்து, பிறரையும் அன்புகூரச் செய்யும் வலிமைபொருந்தியவர்களாக நம்மை மாற்றம் பெறச் செய்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.


ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம்மை அன்பு கூர்ந்ததால் மட்டுமே நாமும் பிறரை அன்புகூர முடிகிறது, ஏனென்றால் அவர் தம்முடைய தூய ஆவியாரை நம் இதயங்களில் ஊற்றுகிறார். அவருடைய அன்பு நம்மை குணப்படுத்துகிறது மற்றும் மாற்றுகிறது என்றும் விளக்கியுள்ளார்.

முந்தைய அடுத்தது