News

தொடரும் கத்தோலிக்க திருஅவை மீதான அடக்குமுறைகள்

ஐ.நா., திருஅவை மற்றும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகள் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, நிக்கராகுவா அரசுத் தலைவர் டேனியல் ஒர்தேகாவின் சர்வாதிகார ஆட்சியானது அந்நாட்டில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவைக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் தாக்குதல்களைத் தொடர்கின்றது என்று அமெரிக்க ஆயர் பேரவையின் அறிக்கை தெரிவித்துள்ளது.


கடந்த மார்ச் மாதம் மனாகுவாவில் உள்ள வத்திக்கான் தூதரகத்தையும், நிக்கராகுவா தூதரகத்தையும் மூடிய நிலையில், சமீபத்தில் இரண்டு அருள்சகோதரிகள் மற்றும் பனாமாவின் கிளரீஷியன் மறைப்பணியாளரையும் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது அமெரிக்க ஆயர் பேரவை.


நிக்கராகுவாவில் நடந்து வரும் கத்தோலிக்க எதிர்ப்பு அடக்குமுறை, அமெரிக்காவின் ஆயர்களுக்குப் பெரும் கவலையைத் தருவதாகவும், அதிகமான துன்பங்கள் இருந்தபோதிலும், நிக்கராகுவா மக்கள் தங்கள் ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களுடன் இணைந்து, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமைக்கு உறுதியுடன் சாட்சியம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார் அமெரிக்கக் கத்தோலிக்க ஆயர்பேரவையின் தலைவரான ஆயர் டேவிட் ஜே. மல்லாய்.

முந்தைய அடுத்தது