News

சிறைக்கைதிகளுக்கு ஆன்மீக வழிகாட்டுதலின் அவசியம்

மதக்குழுக்கள் சிறைக்கைதிகளுக்கு நல்ஆலோசனை வழங்குதல், ஆன்மிக வழிகாட்டுதலை அளித்தல் போன்றவைகளை தடைச் செய்யும் வகையில் கேரள அரசு பிறப்பித்திருந்த ஆணையை தன் முயற்சியால திரும்பப் பெற வைத்துள்ளார் கேரள ஆயர் பேரவைத்தலைவர், கர்தினால் பசிலியோஸ் மார் கிளீமிஸ்.


சிறைக்கைதிகளுக்கு நல்லாலோசனைகளை வழங்குதல், மற்றும் ஜெப வழிபாடுகளை நடத்துதல் போன்றவைகளை தடைசெய்வதாக மார்ச் 31ஆம் தேதி அரசு ஆணை ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து, மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்களைச் சந்தித்த கர்தினால் கிளீமிஸ் அவர்கள், சிறைக்கைதிகளுக்கு ஆன்மீக வழிகாட்டுதலின் அவசியத்தை எடுத்துரைத்து அவ்வாணையை திரும்பப் பெற வைத்ததாக, கேரள ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்பணி ஜேக்கப் பலக்காப்பிள்ளி அறிவித்தார்.


மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை தன்னிடம் ஆலோசிக்காமலேயே வெளியிடப்பட்டதாகவும், இது குறித்து விசாரிக்கப்படும் என முதல்வர் கர்தினாலிடம் உறுதியளித்ததாகவும் அருள்பணி பலாக்கப்பிள்ளி அறிவித்தார்.


குற்ற உணர்வு அல்லது வன்மத்துடன் வாழ்ந்துவரும் சிறைக்கதிகளின் மனமாற்றத்திற்கும், வருங்காலம் குறித்த நல்திட்டமிடலுக்கும் கிறிஸ்தவ சபைகளின் நல் ஆலோசனைகளும் செபவழிபாடுகளும் உதவிவரும் நிலையில் அவைகளைத் தடைச் செய்வது நியாமற்றது என கத்தோலிக்க ஆயர்கள் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். (UCAN)

முந்தைய அடுத்தது