News

அதிகமாகும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை

வறுமை, முறையற்ற ஒதுக்கீடுகள் காரணமாக குழந்தைத் தொழிலாளார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது என்றும் இது விளையாட்டல்ல தடுத்து நிறுத்தப்படவேண்டிய ஒன்று என்றும் அறிவித்துள்ளது Save the Children அமைப்பு


ஏப்ரல் 4, செவ்வாய்க்கிழமை, உரோமையில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தாலியில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பை எடுத்துரைத்து இவ்வாறு தெரிவித்துள்ள Save the Children அமைப்பு, 14 முதல் 15 வயது சிறார்களில் ஐந்தில் ஒருவர் குழந்தைத் தொழிலாளராக இருக்கின்றார் என்றும் அறிவித்துள்ளது.


100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆபத்தில் இருக்கும் சிறாரைக் காப்பாற்றவும், அவர்களின் எதிர்காலத்திற்கு உறுதி அளிக்கவும் போராடி வரும் பன்னாட்டு அமைப்பான Save the Children, இத்தாலியில் குழந்தைத் தொழிலாளர் குறித்த கணக்கெடுப்புச் செய்திகளை வெளியிட்டு அமைப்பின் வரையறைகள், அதன் பண்பு நலன்கள், பரிணாமம் போன்றவற்றையும் விளக்கியுள்ளது.


தொடக்கப் பள்ளியை விட்டு வெளியேறும் சிறார்கள் இத்தாலியில் வணிகம், விவசாயம் கட்டிடப் பணி, உணவுவிடுதி போன்றவற்றில் ஈடுபட்டு தங்கள் வாழ்வை இழக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள இவ்வமைப்பு, நவீன உலகின் சமூக தொடர்பு சாதனங்களால் ஆரம்பக் கல்வியை முழுமையாகக் கற்க மாணவர்களால் இயலவில்லை என்றும் கூறியுள்ளது.


7 முதல் 15 வயதுக்குட்பட்ட 3,36,000 சிறார் மற்றும் இளம் பருவத்தினர் 6.8 விழுக்காடு அளவிற்கு அதாவது 15இல் 1சிறார் குழந்தைத்தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றார்கள் என்றும், 14-15 வயதுடைய 58,000 இளையோர் 27.8 விழுக்காடு பேர் பள்ளிக் கல்வி மற்றும் நல்வாழ்வுக்குத் தீங்கு விளைவிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

முந்தைய அடுத்தது