News

காங்கோவில் 2,40,000 குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் நிகழ்ந்து வரும் மோதல் காரணமாக 7,50,000 குழந்தைகளுக்குக் கல்வி தடைபட்டுள்ளதாகவும், அங்கு நிலவும் பாதுகாப்பற்றச் சூழல் காரணமாக, வடக்கு கிவு மற்றும் இடூரி மாநிலங்களில் உள்ள 2,100 பள்ளிகளை மூடவேண்டிய நிலையுள்ளது என்றும் கூறியுள்ளது UNICEF நிறுவனம்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலால் 53 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், கடந்த மார்ச் 2022-இல் நெருக்கடி தொடங்கியதிலிருந்து வடக்கு கிவுவில் மட்டும் 8,00,000-க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Goma-வைச் சுற்றியுள்ள பெரிய முகாம்களில் வசிக்கும் புதிதாக இடம்பெயர்ந்த ஏறத்தாழ 2,40,000 குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஆயுதக் குழுக்களின் வன்முறையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைத் தடுத்து, பாதுகாப்பைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தைகள் நிதியத்தின் பிரதிநிதி Grant Leaity அவர்கள், காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் அதிகரித்து வரும் மோதல் மற்றும் பாதுகாப்பின்மை சூழல், பள்ளி வயது குழந்தைகளைப் அதிகளவில் பாதித்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

முந்தைய அடுத்தது