துருக்கி, சிரியாவிற்கு திருத்தந்தையின் மறைபரப்புக் கழகம் உதவி
நிலநடுக்கத்தால் பேரிழப்பைச் சந்தித்துள்ள துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளது திருத்தந்தையின் மறைபணிக் கழகம்.
பிப்ரவரி 6, திங்கள்கிழமை காலை துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்த குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும்பொருட்டு, அமெரிக்காவிலுள்ள திருத்தந்தையின் மறைபணிக் கழகங்கள் இந்நாடுகளுக்கான நிலநடுக்க நிதி உதவியை சேகரிக்க முன்வந்துள்ளன.
இந்த நிதியிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மறைபணியாற்றும் அருள்பணியாளர்கள், பெண் துறவறத்தார், மற்றும் பொதுநிலை மறைபணியாளர்கள் அனைவரும் இப்பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவார்கள் என்று சிரியாவிலுள்ள அலெப்போவின் கல்தேய ஆயர் Antoine Audo, SJ அவர்கள் கூறியுள்ளார்.
இந்தத் துயரமான நிலையில் மறைபணியாளர்கள் அனைவரும் துருக்கியிலுள்ள தேசிய இயக்குனருடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளனர் என்றும், இங்கு ஏற்கனவே செயல்பட்டுவரும் உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பெறப்படும் உதவிகள் அனைத்தும் இந்தத் துயரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் பணியாற்றி வருகிறனர் என்றும் கூறியுள்ளார் அமெரிக்காவிலுள்ள திருத்தந்தையின் மறைபணிக் கழக இயக்குநர் பேரருள்தந்தை Kieran Harrington.