News

நேர்காணல்: மறைசாட்சி அருளாளர் தேவசகாயம்

மறைசாட்சி தேவசகாயம், இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும். சிறுவயதிலேயே சமசுகிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். இளைஞரானதும் வில் வித்தை, வர்ம கலைகள், மற்றும், போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார். அதன்பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். இவருக்கும் மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. 1741ம் ஆண்டில் குளச்சல் துறைமுகத்தைப் பிடிக்க வந்த டச்சுப் படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் அவருடைய படைகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டார். நாளடைவில் இந்த டிலனாய், நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதைக் கண்ட அவர் நலம் விசாரித்தார். அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தங்கள் கால் நடைகள் இறந்து போவதாகவும். பயிர்கள் நாசம் அடைந்து போவதாகவும், பொருளாதார ரீதியாகப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை சொல்லிக் கிறித்தவத்தை டிலனாய் அவருக்கு அறிமுகப்படுத்தினார். நாளடைவில் கிறித்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் திருமுழுக்குப் பெற்று கிறித்தவராக நீலகண்ட பிள்ளை விருப்பம் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க ஆலயத்தின் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த ஜொவான்னி பத்தீஸ்தா புத்தாரி இவர் நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "தேவசகாயம்" என்னும் பொருள்தருகின்ற "இலாசர்" என்னும் பெயரைச் சூட்டினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறித்தவர் ஆனார். தேவசகாயம், கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும், இந்துப் பாரம்பரிய நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராகப் பல பொய் குற்றச்சாட்டுகள் அரசு அதிகாரிகளால் சுமத்தப்பட்டன. பலரும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறும்படி வற்புறுத்தினார்கள். ஆயினும் இவர் கிறித்தவ நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். இதனால் தேவசகாயம் அவர்கள், மூன்று ஆண்டுகள் கடுமையான சித்ரவதைகளுக்கு உட்பட்டு 1752-ஆம் ஆண்டு சனவரி மாதம் 14ம் தேதி தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சிசெய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிறைத்தண்டனை

அருளாளர் தேவசகாயம் அவர்கள், சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு முறைகளில் மூன்று ஆண்டுகள் சித்ரவதைகளுக்கு உள்ளானார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரைக் கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்துச் சென்றார்கள். இவர் தான் இறப்பதற்கு முன்பாகத் தன்னை சந்தித்த அருள்பணியாளரிடமிருந்து திருநற்கருணை பெற்றுக்கொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் காட்டிலேயே எறியப்பட்டது. குமரி மாவட்ட கத்தோலிக்க மக்கள் அவரது உடல் பகுதிகளை எடுத்து, நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் கோவிலில் அடக்கம் செய்தனர். (நன்றி https://www.church.catholictamil.com)

மறைசாட்சி தேவசகாயம் அவர்கள், 2012ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 02ம் தேதியன்று அருளாளர் என அறிவிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி அவர் புனிதராக அறிவிக்கப்படவுள்ளார். இந்நிகழ்வையொட்டி, கோட்டாறு மறைமாவட்டத்தின் அருள்முனைவர் ஜான் குழந்தை அவர்கள், வத்திக்கான் வானொலியில் மறைசாட்சி தேவசகாயம் அவர்களின் வாழ்க்கை பற்றி விரிவாகப் பேசினார்.

ஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு
ஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு
22 March 2022, 08:14
அனுப்புக
அச்சிடுக
Angelus prayer and Holy Rosary
25-03-2022 11:00
Angelus prayer and Holy Rosary
From St Peter's Basilica, recitation of the Angelus prayer and Rosary
மேலும் வரவிருக்கும் நிகழ்வுகள்:
25-03-2022 15:55
Penance Celebration and Act of Consecration
25-03-2022 18:00
Basilica of Saint Andrew delle Fratte, Holy
ஒலியோடையை கேட்க
ஒலியோடையை கேட்க
செய்தி மடல்
செய்தி மடல்
அண்மைச் செய்திகள் பெற
சாந்தா மார்த்தா மறையுரை
சாந்தா மார்த்தா மறையுரை
மூவேளை செப உரை
மூவேளை செப உரை
மறைக்கல்வி உரை
மறைக்கல்வி உரை
ஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.ஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.
Vatican News
திருத்தந்தையின் பயணங்கள்

மூவேளை செபம்
சாந்தா மார்த்தா திருப்பலி
திருத்தந்தை மறைக்கல்வியுரை
பயனுள்ள தகவல்

நாங்கள் யார்
தொடர்புக்கு
சட்ட அறிவிப்புகள்
Privacy Policy
Cookie Policy
Faq
மற்ற இணையதளங்கள்

Vatican.va
Vaticanstate.va
Peter's Pence
Photovat.com
மற்ற சேனல்கள்

Schedules
ஒலியோடை
செய்திமடல் பதிவு
Short Waves
பதிவிறக்கத்திற்கு
Facebook
Youtube
Instagram
Rss
Copyright © 2017-2022 Dicasterium pro Communicatione - அ

முந்தைய அடுத்தது