News

தவக்காலம், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உதவ...

தவக்காலம், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று, அவர்களின் உடல், உள்ளத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற காலம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 15, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ள குறுஞ்செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

தவக்காலம் (#Lent) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “உதவி தேவைப்படுவோரைக் கண்டு விலகிச் செல்லாமல் அவர்களைத் தேடிச் சென்று, அவர்களுக்குப் பரிவன்போடு செவிமடுக்கவும், நல்ல வார்த்தைகளைக் கூறவும், தனிமையில் இருப்போரைப் பறக்கணியாமல் அவர்களைச் சந்திக்கவும் ஏற்ற காலம் தவக்காலம்” என்ற வார்த்தைகள் பதிவாகியிருந்தன.

பேராயர் வின்சென்சோ பாலியா

மேலும், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் குறித்து வத்திக்கான் செய்தித்துறையிடம் பேசிய, திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவரான பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், உக்ரைனில் போர் முடிவுக்கு வரவேண்டும் மற்றும், அட்லாண்டிக் பெருங்கடல் முதல், Ural பகுதி வரை, அனைவரையும் அணைத்துக்கொள்ளும் ஐரோப்பாவின் வருங்காலம் குறித்து சிந்திக்கவேண்டும் என்று கூறினார். அனைவரின் உரிமைகள் மதிக்கப்படும் நியாயமான ஓர் அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும் என்றும், ஆயுதங்களும் போரும் நம் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குரிய கருவிகளாக ஒருபோதும் உதவாது என்றும், பேராயர் பாலியா அவர்கள் எடுத்துரைத்தார்

முந்தைய அடுத்தது