News

Malta நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் 2 முதல் 3ம் தேதிவரை Malta நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொள்வார் என, பிப்ரவரி 10, வியாழனன்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

Malta குடியரசுத் தலைவர், சமூகத்தலைவர்கள், மற்றும் அந்நாட்டின் கத்தோலிக்க திருஅவையின் அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2022 ஏப்ரல் 2 முதல் 3 வரை Maltaவிற்கான திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்றும், Valletta, Rabat, Floriana மற்றும் Gozo தீவு ஆகியவைகளுக்குச் செல்கிறார் என்றும், அவரது திட்டம் மற்றும் பயணத்தின் கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

திருத்தந்தை ஏற்கனவே மே 2020ல் Maltaவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார், ஆனால் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக, அவரது பயணம் ஏற்கனவே ஜனவரி 25, 2022க்கு மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

இத்தாலிய தீவான சிசிலிக்கு தெற்கே அமைந்துள்ள மால்டா, கி.பி 60ல் உரோம் நகர் செல்லும் வழியில் புனித பவுலடியார் பயணம் செய்த கப்பல் விபத்துக்குள்ளான இடமாகத் திருத்தூதர்களின் பணிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. Maltaவின் ஏறக்குறைய 5 இலட்சம் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் திருமுழுக்குப்பெற்ற கத்தோலிக்கர்கள் ஆவர். Maltaவின் அரசியலமைப்பின் கீழ் கத்தோலிக்க மதம், இந்நாட்டின் தேசிய மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

புனித இரண்டாம் ஜான் பால் 1990ல் Maltaவுக்குச் சென்ற முதல் திருத்தந்தை ஆவார்.

முந்தைய அடுத்தது