News

Tonga தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டல்

Tonga தீவில் ஜனவரி மாதம் 15ம் தேதி இடம்பெற்ற எரிமலை வெடிப்பு, உலக மக்களுக்கு வெகுதூரமாகத் தெரிந்தாலும், இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்கள் நமக்கு அருகாமையிலேயே உள்ளன என எடுத்துரைத்தார் கர்தினால் Michael Czerny.

பசிபிக் பெருங்கடலிலுள்ள Tonga தீவு நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனவரி 24, திங்கள் மாலையில் உரோம் நகரின் Santa Maria பேராலயத்தில் செபவழிபாடு ஒன்றை தலைமை தங்கி நடத்திய, ஒருங்கிணைத்த மனிதகுல வளர்ச்சிக்கான இடைக்காலத் தலைவர், கர்தினால் Czerny அவர்கள், மூன்று உயிர்கள் இழக்கப்பட்டுள்ள நிலையில், பொருள் சேதத்தின் மதிப்பு மிகப் பெரியது என்றார்.

மக்கள் தங்கள் மன தளர்ச்சிகளிலிருந்து வெளிவரவும், இயற்கைமீதான வன்முறைகள் களையப்படவும். புதிய சமூகக் கட்டுமானப் பணிகள் துவங்கப்படவும் இறைவனை நோக்கி ஒன்றிணைந்து செபிப்போம் என இச்செபவேளையில் அனைவருக்கும் அழைப்புவிடுத்தார் கர்தினால் Czerny.

இவ்வுலகில் வாழும் மக்களிடையே வேறுபாடுகளும் பன்முகத்தன்மைகளும் இருப்பினும், அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை மனதில் கொண்டவர்களாக ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்வோம் என்ற அழைப்பையும் கர்தினால் Czerny அவர்கள் முன்வைத்தார்.

சான் எஜிதியோ என்ற பிறரன்பு அமைப்பால் உரோமின் Trastevereயிலுள்ள புனித மரியன்னை பேராலயத்தில் Tonga மக்களுக்கான செப வழிபாட்டில் உரையாற்றிய கர்தினால் Czerny அவர்கள், அந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் ஒன்றிணைந்த கரங்கள் தேவைப்படுகின்றன என்றார்.

முந்தைய அடுத்தது