News

எத்தியோப்பியாவில் கைது செய்யப்பட்ட ஏழு அருள்சகோதரிகள் விடுதலை!

எத்தியோப்பியாவில் Tigray புரட்சியாளர்களின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் நவம்பர் மாதம் காவலர்களால் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 7 துறவற அருள்சகோதரிகள், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவின் Tigray சிறுபான்மை இனத்தவரின் அரசுக்கு எதிரானப் போராட்டங்கள் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கியதிலிருந்து பலர் கைது செய்யப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி 7 அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டு, தற்போதுதான் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசால் கைது செய்யப்பட்ட, வின்சென்ட் தெ பவுல் பிறரன்பு புதல்வியர் சபையைச் சேர்ந்த ஆறு அருள்சகோதரிகளும், Ursuline துறவு சபையைச் சேர்ந்த ஒருவரும் Tigray சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tigray இனமக்களிலிருந்து கைது செய்யப்பட்ட மேலும் இரு திருத்தொண்டர்கள், இரு அருள்கன்னியர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குறித்த எந்தச் செய்தியையும் வெளியிட மறுத்து வருகிறது அரசு.

நவம்பர் மாதம் 5ம் தேதி தலைநகர் Addis Ababaவுக்கு அருகிலுள்ள Gottera பகுதியின் சலேசிய துறவிகள் கல்வி மையத்திலிருந்து கைது செய்யப்பட்ட 17 பேர் பல்வேறு விசாரணைகளுக்குப் பின் நவம்பர் 13ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

ஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு
ஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு
18 January 2022, 15:40
அனுப்புக
அச்சிடுக

தொடங்கியது ௧௨ நிமிடங்கள் முன்
General Audience
From the Paul VI Hall, the Holy Father’s General Audience
மேலும் வரவிருக்கும் நிகழ்வுகள்:
19-01-2022 11:00
Angelus prayer and Holy Rosary
19-01-2022 18:00
Holy Mass
ஒலியோடையை கேட்க
ஒலியோடையை கேட்க
செய்தி மடல்
செய்தி மடல்
அண்மைச் செய்திகள் பெற
சாந்தா மார்த்தா மறையுரை
சாந்தா மார்த்தா மறையுரை
மூவேளை செப உரை
மூவேளை செப உரை
மறைக்கல்வி உரை
மறைக்கல்வி உரை
ஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.ஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.
Vatican News
திருத்தந்தையின் பயணங்கள்

மூவேளை செபம்
சாந்தா மார்த்தா திருப்பலி
திருத்தந்தை மறைக்கல்வியுரை
பயனுள்ள தகவல்

நாங்கள் யார்
தொடர்புக்கு
சட்ட அறிவிப்புகள்
Privacy Policy
Cookie Policy
Faq
மற்ற இணையதளங்கள்

Vatican.va
Vaticanstate.va
Peter's Pence
Photovat.com
மற்ற சேனல்கள்

Schedules
ஒலியோடை
செய்திமடல் பதிவு
Short Waves
பதிவிறக்கத்திற்கு
Facebook
Youtube
Instagram
Rss
Copyright © 2017-2022 Dicasterium pro Communicatione - அனைத்து உரிமைக

முந்தைய அடுத்தது