News

தொண்டுப் பணிகளை விரிவுபடுத்தும் சீனக் கத்தோலிக்கர்கள்

திருவருகைக்காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அதாவது மகிழ்ச்சியின் ஞாயிறன்று தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கத்தோலிக்கக் குழுமங்கள் ஒன்றுகூடி வந்து தங்களின் பங்குகளில் ஒளியின் திருவிழாவாக இதனைச் சிறப்பித்தனர். சமீபத்திய கோவிட-19 முடக்குதலுக்குப் பிறகு இதனை அவர்களால் செய்ய முடிந்திருக்கிறது.

"தியோதொரிகோ பெத்ரினி" (Teodorico Pedrini) பங்கைச் சேர்ந்தவர்கள் அந்நிகழ்வைப் பாடல்களால் நிரப்பினார்கள். 1671-1746ம் ஆண்டுளில் இத்தாலிய மறைப்பணியாளர் தியோதொரிகோ பெத்ரினி அவர்கள், இப்பங்குத் தளத்தை நிறுவியதுடன், குயிங் ஏகாதிபத்திய வம்சத்தின்போது அவர் பணியாற்றினார். புகழ்பெற்ற புனித பாடல்களை இவர் எழுதியுள்ளதால் பாடகர் குழு "தியோதொரிகோ பெத்ரினி" என்ற அவர் பெயரையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Fides செய்தி அமைப்பு வழங்கியுள்ள செய்தியின்படி, இந்த மெழுகுதிரி வழிபாடானது அந்தப் பங்கைச் சுற்றி வாழும் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவின் சகித்திவாய்ந்த கிறிஸ்தவ மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (Fides)திருவருகைக்காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அதாவது மகிழ்ச்சியின் ஞாயிறன்று தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கத்தோலிக்கக் குழுமங்கள் ஒன்றுகூடி வந்து தங்களின் பங்குகளில் ஒளியின் திருவிழாவாக இதனைச் சிறப்பித்தனர். சமீபத்திய கோவிட-19 முடக்குதலுக்குப் பிறகு இதனை அவர்களால் செய்ய முடிந்திருக்கிறது.

"தியோதொரிகோ பெத்ரினி" (Teodorico Pedrini) பங்கைச் சேர்ந்தவர்கள் அந்நிகழ்வைப் பாடல்களால் நிரப்பினார்கள். 1671-1746ம் ஆண்டுளில் இத்தாலிய மறைப்பணியாளர் தியோதொரிகோ பெத்ரினி அவர்கள், இப்பங்குத் தளத்தை நிறுவியதுடன், குயிங் ஏகாதிபத்திய வம்சத்தின்போது அவர் பணியாற்றினார். புகழ்பெற்ற புனித பாடல்களை இவர் எழுதியுள்ளதால் பாடகர் குழு "தியோதொரிகோ பெத்ரினி" என்ற அவர் பெயரையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Fides செய்தி அமைப்பு வழங்கியுள்ள செய்தியின்படி, இந்த மெழுகுதிரி வழிபாடானது அந்தப் பங்கைச் சுற்றி வாழும் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவின் சகித்திவாய்ந்த கிறிஸ்தவ மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (Fides)

முந்தைய அடுத்தது