News

திருத்தந்தையின் செய்தியை வெளியிட்ட கர்தினால் செர்னி

உலகளாவிய இந்தப் பெருந்தொற்றிலிருந்து வெளியேறும் வேளையில், நாம் அனைவரும் இணைந்து, உன்னதமானதோர் உலகை உருவாக்கமுடியும், அல்லது, நம்மைப்பற்றி மட்டும் சிந்திக்கும் சுயநல உலகை உருவாக்கமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Fratelli tutti திருமடலில் கூறியுள்ளதை, மீண்டும் ஒருமுறை, தான் வ்ழங்கியுள்ள உலகச்செய்தியில் நினைவுறுத்தியுள்ளார் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இவ்வாண்டு செப்டம்பர் 26ம் தேதி, ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் 107வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாளுக்கென "இன்னும் விரிவடைந்த 'நாம்'-ஐ நோக்கி" என்ற தலைப்பில், திருத்தந்தை உருவாக்கியுள்ள செய்தி, மே 6, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர், கர்தினால் மைக்கில் செர்னி அவர்கள், இச்செய்தி வெளியிடப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், திருத்தந்தை வெளியிட்ட Fratelli tutti திருமடலுக்கும், இன்று வழங்கியுள்ள உலகச்செய்திக்கும் இடையே உள்ள ஒப்புமைகளை

முந்தைய அடுத்தது