News

அன்னையின் செய்தி

அன்பான பிள்ளைகளே! சமாதானத்தை விரும்பாத, தங்களின் அற்ப நலன்களை விரும்பும் மக்களின் இதயங்களில் வெறுப்பு மற்றும் போர் வெறி பரவி வருகின்றது. எனவே எனது அன்பான பிள்ளைகளே, என் தாய்மை உள்ளத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் செபமாகவும், அன்பு மற்றும் சமாதானத்திற்காக நீட்டப்பட்ட கரங்களாகவும் உள்ளீர்கள். இறைவன் உங்களுக்குக் கொடுக்க விரும்பும், ஆனால் சிலர் விரும்பாத சமாதானத்திற்காக மேலும் மேலும் செபியுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் ஒவ்வொரு இதயத்திலும் சமாதானம் வெற்றி பெற்று ஆட்சி செய்ய வேண்டும் என செபிக்கின்றேன். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன். (திருஅவையின் அனுமதியுடன்)

முந்தைய