கோவை மறைமாவட்டம் அதிதூதர் மைக்கேல் பேராலயம் மக்கள் வெள்ளத்தால் குலுங்கியது
12.07.2015 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் தமிழக ஆயர் பேரவையை சார்ந்த தமிழக மறைமாவட்ட ஆயர்கள் கலந்துக் கொண்ட சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
முன்னதாக பேண்டு வாத்தியங்கள் முன்பாக முழங்க தொடர்ந்து அருட்தந்தையர்கள் பவனியாக வர அவர்களை தொடர்ந்து குழந்தைகள் மலர்கள் தூவ தமிழக ஆயர்கள் , செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிசாமி நீதிநாதன் ,கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்வினாஸ், தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் ,கோட்டார் மறைமாவட்ட ஆயரும் , தமிழக ஆயர் பேரவையின் தலைவருமான மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் , குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பிரான்சிஸ் அந்தோனிசாமி ,குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் வருவேல் , சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி , மதுரை உயர் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி , மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் மேதகு மார் பௌலோஸ் , உதகை மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் , பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜூடு ஜெரால்டு பால்ராஜ் , ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் மேதகு பால் ஆலப்பாட் சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு சிங்கராயர் , சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு சூசைமாணிக்கம் , தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் , தக்கலை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜார்ஜ் ராஜேந்திரன் ,திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனி டிவோட்டா , தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு யுவான் அம்புரோஸ் , வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு சௌந்தரராஜூ பெரியநாயகம் பவனியாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார்கள் . திருப்பலியை மேதகு ஆயர்கள் பீட்டர் ரெமிஜியூஸ் , ஜார்ஜ் அந்தோனிசாமி , மற்றும் பிரான்சிஸ் அந்தோனிசாமி ஆகியோர் முன்னின்று நிறைவேற்றினார்கள்.
நற்செய்தி வாசகத்திற்கு முன்பாக திருவிவிலியத்தை தமிழ் பண்பாடு முறைப்படி மாணவக் கண்மணிகள் பரதநாட்டியத்துடன் பவனியாக திருத்தொண்டர் தாங்கி வர புதுமையாக இருந்தது.இறுதியாக இறையாசீர் வழங்கினார்கள். ஏராளமான இறைமக்கள் இதில் கலந்துக்கொண்டு இறையாசீர் பெற்று பரவசமடைந்தனர் . இதற்கு விரிவான ஏற்பாடுகளை கோவை மறைமாவட்டம் சிறப்பாக செய்திருந்தது.
(ஆதாரம் : மாதா TV)