News

எம் கனவின் முதல் கட்டம் நனவானது

“எல்லா சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காக கிறிஸ்து இயேசு வழியாக கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
(1 தெச 5:18)
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், 1987 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு, பல இயக்குனர்கள் காலத்தில் பல சமூக பணிகளை ஆற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. 30 வருடம் கடந்து இதன் ஓர் வளர்ச்சிப் படியாக யாழ். ஆயர் மேதகு. யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் அனுமதியுடன், கொழும்புத்துறை தூய வளனார் மூதாளர் இல்லத்தை பொறுப்பெடுத்து, அதன் முதல் கட்டமாக, நிர்வாகக் கட்டிடத் தொகுதி, 2017 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
28. 11. 2020 ஆம் ஆண்டு புதிய கட்டடத் தொகுதி யாழ் ஆயரினால் திறந்துவைக்கப்பட்டது. இந்த வேளையில் ஆன்மீகப்பணியகம் சார்பாக ஆயர் அவர்களுக்கு, அவரது ஆயத்துவ அபிஷேக நாளில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும், பணியகம் சார்பாக தெரிவிக்கின்றோம். இக்கட்டடம் அழகுற அமைய, உழைத்த அனைவருக்கும், விசேடமாக நிதி உதவி செய்த பணியக உறவுகளுக்கும், பிற மத சகோதரர்களுக்கும், ஆயர் சார்பிலும், மூதாளர்கள் சார்பிலும், பணியகம் சார்பிலும், நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றோம்.
இது முடிவு அல்ல, ஆரம்பமே! இங்கு வாழும் மூதாளர்கள், எம் சொந்த உறவுகளே, என்ற மனநிலையோடு அதே நாளில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இரண்டாம் கட்டடத் தொகுதிக்கு எம் உதவிகளை நல்குவோம். அவர்கள் எம் பெற்றோர், நாங்கள் அவர்கள் பிள்ளைகள், என்ற குடும்ப உணர்வுடன் பயணிப்போம். மீண்டும் உங்கள் தியாகத்துக்கும், அயராத உழைப்புக்கும், என் நன்றிகள்.

முந்தைய அடுத்தது