Banner Image

01-05-2026
பாஸ்கா காலம் நான்காவது வாரம் வெள்ளிக்கிழமை

தொழிலாளரான புனித யோசேப்பு
முதல் வாசகம் – தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 26- 2: 3
பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்.
கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு பலுகிப் முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார்.

கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.

அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார்.

அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 90: 2. 3-4. 12-13. 14,16 (பல்லவி: 17c)
பல்லவி: ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்!
2மலைகள் தோன்றும் முன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! - பல்லவி

3மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.4ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

12எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.13ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.16உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 68:19

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58
அக்காலத்தில்
இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
இயேசு அருளும் நிறைவாழ்வு
இன்று அனைத்துலக தொழிலாலளர் தினம் கொண்ட்டப்படுகிறது. தொழிலாளர் தினத்திற்கும் (மே 1) கிறிஸ்தவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, குறிப்பாக கத்தோலிக்க திருஅவையில் இந்த நாள் தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பின் (St. Joseph the Worker) நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

முதல் வாசகத்தில், கடவுளால் அழைக்கப்பட்ட பவுல் சோம்பித் திரியவில்லை. உழைப்பால் நற்செய்தி பணியாற்றினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
புனித யோசேப்பு, ஒரு தச்சராகப் பணியாற்றி, இயேசுவுக்கும் மரியாவுக்குமாக உழைத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தவர். எனவே, அவர் உழைக்கும் வர்க்கத்தின் முன்மாதிரியாகக் கருதப்படுகிறார். உழைப்பு கடவுளின் பார்வையில் மாட்சிக்குரியது.

அவர்தான் மனிதனைப் படைத்து, மண்ணுலகை ஆளுமை செய்யவும், உழைப்பை ஆற்றலுக்கு உட்படுத்தவும் ஆசி வழங்கினார் (தொ. நூ. 1:28). எனவே மனித உழைப்பை கடவுளின் ஆசியாகப் பார்க்க வேண்டும்.

உழைப்பவர்களின் மாட்சியையும் உரிமைகளையும் எப்போதும் முன்னிறுத்துவது திருஅவையின் (நமது) கடமையாகும். தொழிலாளர்களின் மாட்சியும் உரிமைகளும் மீறப்படும் சூழல்களை கண்டிக்கவும் திருஅவை (நாம்) தவறக்கூடாது. கடவுள் உலகத்தின் முதலாளி. உலகில் நாம் அனைவரும் அவரது தொழிலாளி என்பதை நினைவில் கொள்வோம்.

நிறைவாக, "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" எனும் மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை நினைவுகூர்ந்து அனைத்து நிலையிலான தொழிலாளர்களுக்காவும் இறைவேண்டல் செய்வோம்.

மன்றாட்டு:

இயேசுவே! உழைக்கும் அனைவரது உழைப்பை ஆசீர்வதித்து, நீதி மற்றும் மரியாதையுடன் வாழும் அருளை அருள்வீராக, ஆமென்..
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media