News

ஆப்பிரிக்கா, ஸ்பெயின் & மொனாக்கோவிற்குத் திருத்தூதுப் பயணம்

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13, திங்கள்கிழமை முதல் 23, வியாழக்கிழமை வரை, அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் திருத்தந்தை.

பத்து நாட்கள் கொண்ட இந்தத் பயணம் அல்ஜியர்ஸ் மற்றும் அன்னாபா; யாவுண்டே, பமெண்டா மற்றும் டுவாலா; லுவாண்டா, முக்சிமா மற்றும் சௌரிமோ; மேலும் மலாபோ, மொங்கோமோ மற்றும் பட்டா உள்ளிட்ட நகரங்களையும் உள்ளடக்கியுள்ளது.

திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணம், அமைதி, ஏழைகளுடனான ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவை வலியுறுத்துவதாக இருக்கும். மேலும் இதில் கேமரூனின் மோதலால் பாதிக்கப்பட்ட ஆங்கிலோஃபோன் மாநிலத்தின் பகுதியிலுள்ள மக்களையும் சந்திக்கிறார் திருத்தந்தை.

ஸ்பெயின் நாட்டில் திருத்தூதுப் பயணம்

இறுதியாக, ஜூன் 6, சனிக்கிழமை முதல் 12, வெள்ளிக்கிழமை வரை, ஸ்பெயினிலுள்ள மாத்ரித், பார்சலோனா, டெனெரிஃப் மற்றும் கிரான் கனாரியா ஆகிய இடங்களுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் திருத்தந்தை.

பார்சலோனாவில், கட்டிடக் கலைஞர் அந்தோணி கௌதியின் இறப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், திருக்குடும்ப பேராலயத்தின் புதிய மற்றும் மிக உயரமான கோபுரத்தை திறந்து வைப்பார் திருத்தந்தை.

உலகளாவிய மேய்ப்புப் பணிப் பயணம்

இந்த மூன்று திருத்தூதுப் பயணங்களும், பல்வேறு கலாச்சார, அரசியல் மற்றும் மதச் சூழல்களில் திருத்தந்தையின் தொடர்ச்சியான உலகளாவிய மேய்ப்புப் பணிப் பயணத்தைப் பிரதிபலிக்கின்றன.

முந்தைய அடுத்தது