News Image

‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை

யாழ். திருமறைக்கலாமன்ற தயாரிப்பான ‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை பங்குனி மாதம் 26ஆம் ஆரம்பமாகி 29ஆம் திகதி வரை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும், அரங்கப் பின்னணியிலும் இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களின் பங்கேற்புடன் மேடையேற்றப்பட்ட இத்தவக்கால ஆற்றுகையில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த ஆயிரக்கணக்கானோர் பக்திபூர்வமாக
இணைந்துகொண்டனர்.

“காவிய நாயகன்” திருப்பாடுகளின் காட்சி திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குநர் அமரர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களால் எழுதப்பட்டு அவரது நெறியாள்கையில் முதன் முதலாக 2001ஆம் ஆண்டிலும் தொடர்ந்து 2004, 2008, 2013, 2022ஆம் ஆண்டுகளிலும் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டதுடன் தற்பொழுது திரு. ஜெயக்காந்தன் அவர்களின் நெறியாள்கையில் 6ஆவது தடவையாக மேடையேற்றப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முந்தைய அடுத்தது