News Image

அருட்தந்தை பீற்றர் அமல்ராஜ் மற்றும் புதுவாழ்வு இயக்க குழுவினரின் தவக்கால தியானமும்

இந்தியா தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்தை கப்புச்சீன் சபை அருட்தந்தை பீற்றர் அமல்ராஜ் மற்றும் புதுவாழ்வு இயக்க குழுவினர் இணைந்து முன்னெடுக்கும் தவக்கால தியானமும் குணமாக்கல் வழிபாடும் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றுவருகின்றன.
பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவரும் இவ்வழிபாடுகள் இளவாலை புனித யூதா ததேயு ஆலயம், அஞ்சனந்தாழ்வு புனித கொலை விலக்கி அன்னை ஆலயம், யாழ்ப்பாணம் தியான இல்லம், இரணைப்பாலை பங்கு, வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா, இரணைமாதாநகர் பங்கு ஆகிய இடங்களில் இடம்பெற்றதுடன் தொடர்;ந்து பூநகரி, அக்கராயன், சில்லாலை, சுன்னாகம், இளவாலை, குருநகர், பண்டத்தரிப்பு, கொழும்புத்துறை, பளை, நவாலி ஆகிய பங்குகளிலும் யாழ்ப்பாணம் இறைதியான இல்லத்திலும் நடைபெறவுள்ளன.
திருப்பலி, குணமாக்கல் வழிபாடு, தியான உரை, நற்கருணை வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாடுகளில் ஏராளமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றிவருகின்றனர்.

முந்தைய அடுத்தது