News Image

கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்

கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றன.

பங்குனி மாதம் 24ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிநாள் வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆயத்தநாள் வழிபாடுகளை அமலமரித்தியாகிகள் சபை மறையுரைஞர் குழுமத்தினரும் இறுதிநாள் வழிபாடுகளை அருட்தந்தை பிறையன் அவர்களும் தலைமைதாங்கி நடாத்தினார்கள்

அத்துடன் கரவெட்டி பங்கு இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை பங்குனி மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இறைமக்கள் தங்களின் ஆலயங்களில் இருந்து பாத யாத்திரையை ஆரம்பித்து வரணி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற சிலுவைப்பாதை தியானம் திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினர். திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.

முந்தைய அடுத்தது