News Image

இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் யாத்திரை தல மண்டபத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட மறைக்கல்விக்கு பொறுப்பான அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை, கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்படும் தேசிய திருவிவிலிய அறிவுப்போட்டிக்கு ஆசிரியர்களை தாயாரிக்கும் செயலமர்வு, நற்கருணை வழிபாடு என்பன நடைபெற்றன.

செயலமர்வை அருட்சகோதரி யோகா அவர்கள் நெறிப்படுத்தியதுடன் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய
இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் கலந்து தேசிய திருவிவிலிய அறிவுப்போட்டி தொடர்பான தகவல்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் 200ற்கும் அதிகமான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

முந்தைய அடுத்தது